தாஜ்மஹால் ஒரு சிவன் கோயில் என்கிறார்களே! தெரியுமா?

தாஜ்மஹால் ஒரு சிவன் கோயில் என்கிறார்களே! தெரியுமா?
உலகின் சிறப்பு வாய்ந்த அதிசயங்களுள் ஒன்று தாஜ்மஹால் இது காதலின் நினைவு சின்னமாக விளங்குகிறது. மற்றும் அது முகலாயர்கள் கட்டுமானத்தின் புகழுக்கும் உலக அளவில் பெயர்பெற்றது. முகலாய மன்னரான ஷாஜகான் அவரது காதல் மனைவி மும்தாஜ் மஹாலுக்காக கட்டியதுதான் தாஜ்மஹால். தாஜ்மஹால் பல்வேறு புகழுக்கு சொந்தமானது. அதன் கட்டடக்கலை, வண்ணங்கள், சிறப்புகள் என பலபேர் பலவிதமாக கூறி கேட்டிருப்போம். இந்த கோடையில் மனைவி (அ) காதலியுடன் செல்ல ஏற்ற 'அந்த' இடங்கள்! தொலைகாட்சிகளிலும், புத்தகங்களிலும் தாஜ்மஹாலின் சிறப்பை பற்றி வியந்திருப்போம். அதே நேரத்தில் இந்த தாஜ்மஹால் பல்வேறு வகையான விமர்சனங்களையும் கொண்டுள்ளது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? தாஜ்மஹால் ஒரு சிவன் கோயிலா அதிர்ச்சியூட்டும் மர்மங்கள் தெரியுமா?மர்மங்கள் நிறைந்த தாஜ்மஹால் உலகத்தையே தன் பக்கம் திருப்பி பார்க்கும் ஒரு உலக சிறப்பு மிக்க கட்டிடமாக அன்பின் சின்னமாக விளங்கும் தாஜ்மஹால் பல்வேறு மர்மங்கள் நிறைந்து காணப்படுகிறது.பத்மநாபசுவாமி கோயில் பத்மநாபசுவாமி கோயிலைப் போல தாஜ்மஹாலிலும் பல அறைகளில் பல மர்மங்கள் புதைந்துள்ளது தெரியுமா22 ஆண்டுகள் இந்த அதிசய கட்டிடத்தை கட்டி முடிக்க 22 ஆண்டுகள் ஆனதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஆனால் அங்குதான் ஒரு சந்தேகம் எழ ஆரம்பிக்கிறதுஇதுதான் சந்தேகம் இந்த கட்டிடம் இஸ்லாமிய கட்டிட தோற்றத்தில் இருப்பதாக நம் அனைவராலும் நம்பப்பட்டது. ஆனால் இங்கு இருக்கும் சில அடையாளங்கள் இதை சிவன் கோயிலாக சந்தேகிக்க வைக்கிறது என்கின்றனர் சிலர்.தாஜ்மஹாலா தாஸ்மஹாலா? ஷாஜகான் இந்த கட்டிடத்துக்கு தாஜ்மஹால் எனப் பெயரிட்ட காரணம் தன் மனைவி மும்தாஜ் மஹாலின் பெயர்தான் என இதுவரை நம்பி வந்தோம். ஆனால் இப்போது கிடைத்துள்ள சில தகவல்கள் அதை சந்தேகிக்க வைக்கின்றன. மும்தாஜ் மஹால் அல்ல மும்தாஸ் உல்சமீன் ஷாஜகானின் மனைவி பெயர் மும்தாஜ் மஹால் அல்ல மும்தாஸ் உல்சமீன் என சிலர் குறிப்பிட்டுள்ளனர். இதையே ஆராய்ந்து பார்க்கும் போதுதான் அந்த மர்ம பெயர் வெளியே வந்தது. ஐரோப்பியர்களின் உச்சரிப்பு ஷாஜகான் காலத்தில் பார்வையாளர்களாக தாஜ்மஹாலுக்கு வந்தவர்கள் எழுதிய குறிப்புகளில் தாஸிமகால் என குறிப்பிடப்பட்டுள்ளது தெரியவந்தது. wikiதாஜ்மஹால் பெயர்காரணம் இதுவரை நினைத்திருந்த மும்தாஜ் மஹாலின் உண்மை பெயர் மும்தாஸ் உல்சமீன் எனும்போது, தாஜ்மஹால் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா?இதுதான் அந்த பெயர் சிலர் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்ட பொழுதுதான் தெரியவந்தது அந்த சமக்கிருத வார்த்தை தேஜோ மஹாலயா...பூதாகரமாக வெடித்தது அந்த சந்தேகம் தேஜோ மஹாலயா என்பது சிவன் கோயிலை குறிப்பது எனவும், அப்படியிருக்க ஷாஜகான் ஏன் இந்த பெயரை சூட்டினார் என்பது சந்தேகப் பார்வை கொண்டு நோக்குவோருக்கு இன்னும் பசியை தூண்டியது. அப்படி இருக்கையில்தான் இந்த ஆராய்ச்சியில் ஒரு விசயம் கண்டுபிடிக்கப்பட்டது.