சென்னையிலிருந்து வெறும் 5000 செலவுல எங்கெல்லாம் டூர் போகலாம் தெரியுமா?

சென்னையிலிருந்து வெறும் 5000 செலவுல எங்கெல்லாம் டூர் போகலாம் தெரியுமா?
சென்னை - பெங்களூரு - மைசூரு குடும்பத்துடன் பிக்னிக் செல்ல இந்த டிரிப் நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு தேவையான குதூகலமும், பெரியவர்களுக்குத் தேவையான ஆன்மீகமும் மற்றும் புதிய தம்பதிகள் அனுபவிக்க ஏற்ற பல சிறப்பம்சங்கள் இந்த டிரிப்பில் இருக்கிறது. வாங்க போலாமா?போகும் வழியில் சென்னையிலிருந்து பெங்களூரு 349 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. செல்லும் வாகனத்தைப் பொறுத்து 5 முதல் ஆறரை மணி நேரம் ஆகின்றது. இந்த பயணத்தின் வழியில் நாம் காஞ்சிபுரம், வேலூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் வழியாக இறுதியில் பெங்களூரை அடைவோம்.எடுத்துச் செல்லவேண்டியவை பயணத்துக்கு அத்தியாவசியமான பொருள்கள் அனைத்தையும் கட்டிக்கொள்ளவும். முக்கியமாக வீட்டில் பெரியவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், குழந்தைகளுக்கு தேவையான பொருள்கள், கொறிக்க சில திண்பண்டங்கள் போன்றவற்றை மறக்காமல் வாங்கிக்கொள்ளுங்கள். செல்லும்வழியிலும் கொறிப்பதற்கென பண்டங்கள் கிடைக்கும். அதை சிலர் வாங்குவதில்லை. உங்கள் வசதிக்கேற்ப திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.எடுத்துச் செல்லவேண்டியவை பயணத்துக்கு அத்தியாவசியமான பொருள்கள் அனைத்தையும் கட்டிக்கொள்ளவும். முக்கியமாக வீட்டில் பெரியவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், குழந்தைகளுக்கு தேவையான பொருள்கள், கொறிக்க சில திண்பண்டங்கள் போன்றவற்றை மறக்காமல் வாங்கிக்கொள்ளுங்கள். செல்லும்வழியிலும் கொறிப்பதற்கென பண்டங்கள் கிடைக்கும். அதை சிலர் வாங்குவதில்லை. உங்கள் வசதிக்கேற்ப திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.புறப்படும் நேரம் காலை 5 மணிக்கெல்லாம் தயாராகி விடுங்கள். நாம் காலை 11 மணிக்கெல்லாம் சென்றுவிடலாம். இந்த கட்டுரை சொந்த வாகனத்தில் பயணிப்பவர்கள் மற்றும் அரசு பொதுப்போக்குவரத்தில் பயணிப்பவர்கள் என இருவருக்கும் ஏற்றவாரு அளிக்கப்பட்டுள்ளது. சொந்த வாகனத்தில் சென்றால், 5 மணி நேரத்துக்கும் சிறிது அதிகமான நேரத்தில் சென்றுவிடலாம். அதே நேரம் பொதுப்போக்குவரத்து சற்று அதிக நேரம் பிடிக்க வாய்ப்புள்ளது.பெங்களூருவில் சுற்றிப்பார்க்கவேண்டிய இடங்கள் லால்பாக் பூங்கா, கப்பன் பூங்கா, பன்னார்கட்டா தேசிய உயிரியல் பூங்கா, இஸ்கான் கோயில், விதான சவுதா, உல்சூர் ஏரி, வொண்டர்லா, நந்தி கோயில் முதலிய இன்னும் பல இடங்களுக்கு செல்லலாம். சொந்த வாகனத்தில் வருபவர்கள் நாள் முழுவதும் இருந்தால் இந்த இடங்கள் அனைத்துக்கும் சென்று வரலாம். ஆனால் பொதுப்போக்குவரத்தில் பயணிப்பவர்கள் முக்கிய இடங்களை மட்டுமே பார்க்கமுடியும். அப்படி உங்கள் வசதிக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். Show Thumbnailசொந்த வாகனம் பெங்களூரு டிராபிக் உலக புகழ் பெற்றது. அதனால் உங்கள் சுற்றுலா பாதிக்கப்படாமல் இருக்க இந்த வழிமுறையை பின்பற்றுங்கள். முதலில் மடிவாலாவிலிருந்து 20 நிமிட தொலைவில் உள்ள லால் பாக் தாவரவியல் பூங்காவுக்கு செல்வோம். அடிக்கும் வெயிலுக்கு தகுந்த இடம். உங்கள் குடும்பத்துடன் இளைப்பாற அருமையான இடம். Muhammad Mahdi Karimபொது போக்குவரத்து குறைந்த நேரமே இருந்தாலும், முற்றிலும் அனுபவிக்க ஏற்ற இடங்களுக்கு நேட்டிவ் பிளானட் உங்களை வழிநடத்துகிறது. பயனுறுங்கள். மடிவாலாவிலிருந்து சிறிது தூரத்தில் மசூதி பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது. அங்கு 343k என்ற பேருந்தில் ஏறி 15 நிமிட தூரத்தில் இருக்கும் லால்பாக் முதன்மை வாயிலை அடையலாம்.நுழைவுக் கட்டணம் சீசனுக்கு தகுந்தார்போல நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தகுந்த கட்டணத்தை செலுத்திவிட்டு உள்ளே சென்று அனுபவியுங்கள். பின் அங்கிருந்து ஷாப்பிங் செய்ய சிறந்த இடமான கேஆர்மார்க்கெட், வரலாற்று பகுதிகளான திப்பு சுல்தான் கோடை மாளிகை, பெங்களூரு கோட்டை முதலியவற்றை எளிமையாக அடையலாம்.குழந்தைகள் மகிழ பள்ளி விடுமுறையை கொண்டாடும் வகையில் குழந்தைகள் குதூகலிக்க ஏற்ற வொண்டர்லா, பெங்களூரு மாளிகை, கருடா மால், உல்சூர் ஏரி போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். லால்பாக் தாவரவியல் பூங்காவிலிருந்து 343F பேருந்தை பிடித்து அருகிலுள்ள என்ஆர் பேருந்து நிறுத்தத்துக்கு செல்லுங்கள். அங்கிருந்து K 4 , 226N முதலிய பேருந்துகளில் வொண்டர்லாவை அடையலாம். சொந்த வாகனத்தில் சென்றால் தேநெசா 275 ல் செல்லும்போது 1 மணிநேரத்தில் வொண்டர்லாவை அடையலாம்.மைசூரு பயணம் இந்த பயணம் இப்போதே முடியவில்லை. இதைத்தொடர்ந்து மைசூருக்கு பயணிக்கலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் நேட்டிவ் பிளானட் தமிழ். மைசூருக்கு செல்லும் வழிகாட்டிபோடு தகிட தகிட... மலை போல் குவிஞ்சிருக்கும் புதையல்கள் இது இந்தியாவுல தானுங்கோ! போடு தகிட தகிட... மலை போல் குவிஞ்சிருக்கும் புதையல்கள் இது இந்தியாவுல தானுங்கோ!