பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் புயலில் சிக்கி மூழ்கிய சரக்கு கப்பல்...11 இந்தியர்கள் பலி?

பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் புயலில் சிக்கி மூழ்கிய சரக்கு கப்பல்...11 இந்தியர்கள் பலி?

மணிலா: பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் புயலில் சிக்கி மூழ்கிய சரக்கு கப்பலில் சென்ற 11 இந்தியர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஹாங்காங் பகுதியை சேர்ந்த 33,205 டன் எடையுள்ள அந்த சரக்கு கப்பல் பசிபிக் பெருங்கடல் பகுதி வழியாக சென்றபோது புயலில் சிக்கி, பிலிப்பைன்ஸ் எல்லையில் இருந்து சுமார் 280 கிலோமீட்டர் தூரத்தில் இன்று நீரில் மூழ்கியது.

கப்பலில் இருந்த 26 இந்தியர்களில் 15 பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல்போன 11 இந்தியர்களை தேடும் பணியில் ஜப்பான் நாட்டு கடலோரக் காவல் படையை சேர்ந்த இரு ரோந்துப் படகுகள் மற்றும் மூன்று விமானங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.