ரோஹிங்கியா அகதிகள் வசிக்கும் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்தன

ரோஹிங்கியா அகதிகள் வசிக்கும் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்தன

தென்கிழக்கு வங்கதேசத்தில் கனமழை காரணமாக ரோஹிங்கியா அகதிகள் வசிக்கும் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரை காணவில்லை.

மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் கடந்த ஆண்டு ராணுவத் தாக்குதல் காரணமாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் லட்சக்கணக்கானோர் அந்நாட்டை விட்டு வெளியேறி வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்தனர். இவங்கள் வங்கதேசத்தில் மியான்மரை ஒட்டிய ரங்கமதி, காக்ஸ் பஜார் ஆகிய மாவட்டங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் பல்வேறு இடங்களில் அகதிகளின் குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.