24 மணி நேரத்தில் 60 தலீபான்களை கொன்று குவித்த ஆப்கான் ராணுவம்

24 மணி நேரத்தில் 60 தலீபான்களை கொன்று குவித்த ஆப்கான் ராணுவம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்க படையின் உதவியோடு ஆப்கான் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது.

இந்த நிலையில் லாகர், வார்டாக், பாக்டிகாக் ஆகிய மாகாணங்களில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்வழியாகவும், தரை வழியாகவும் ஆப்கான் ராணுவத்தினர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். 

இந்த அதிரடி தாக்குதலில் 24 மணி நேரத்தில் 60 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தகவலை ஆப்கான் ராணுவம் தெரிவித்தது.