ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்

காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பரா மாகாணத்தின் மேற்கு பகுதியில் பலா பலூக் மாவட்டம் அமைந்துள்ளது. சமீபகாலமாக இங்குள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.அவ்வகையில், தலிபான்கள் இன்று நடத்திய ஆவேச தாக்குதலில் ராணுவ கமாண்டோ படையை சேர்ந்த 7 வீரர்களும், 8 போலீசாரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்


Loading...