அமெரிக்க கூட்டு படைகள் சிரியாவில் வான்வழி தாக்குதல்; டிரம்ப்

அமெரிக்க கூட்டு படைகள் சிரியாவில் வான்வழி தாக்குதல்; டிரம்ப்

வாஷிங்டன்: உள்நாட்டு போர் சூழ்ந்த சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுவரை அங்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் வன்முறைக்கு பலியாகி உள்ளனர்.கடந்த 7ந்தேதி அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமா நகரை கைப்பற்ற ரஷ்ய ஆதரவு பெற்ற சிரிய அரசு படைகள் முற்றுகையிட்டன. இந்த நிலையில், கிழக்கு கூட்டா பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான ரசாயன தாக்குதலில் 70 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் வெளியானது.