அமெரிக்க நியூஜெர்சி மாகாணத்தில் சீக்கியர், மேயர் ஆனார்

அமெரிக்க நியூஜெர்சி மாகாணத்தில் சீக்கியர், மேயர் ஆனார்

நியூயார்க்:அமெரிக்காவின்  நியூஜெர்சி மாகாணத்தில் சீக்கியர் ஒருவர் மேயர் பதவிக்கு தேர்வு பெற்றிருப்பது இதுவே முதல் முறை. அதுவும் இதுவரை மேயர் பதவி வகித்து வந்த டான்ஜிம்மரால் இவர் முன்மொழியப்பட்டவர் ஆவார்.பலத்த போட்டிக்கு மத்தியில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவீந்தர் பல்லா, அங்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பொருளாதார உளவியல் பட்டமும், லண்டன் பொருளாதார பள்ளியில் படித்து எம்.எஸ்.சி. பொது நிர்வாக பட்டமும், லூசியானாவில் டுலானே சட்டப்பள்ளியில் படித்து ஜூரிஸ் டாக்டர் பட்டமும் பெற்றார். நியூஜெர்சி, நியூயார்க் மாகாணங்களில் உள்ள கோர்ட்டுகளில் ஜூரியாக (நடுவராக) இருந்து வந்துள்ளார்.7 ஆண்டுகளுக்கு மேலாக நகர கவுன்சில் உறுப்பினர் பதவியும் வகித்துள்ளார். .