கலிபோர்னியாவில் போர் விமானம் கட்டிடத்துக்குள் பாய்ந்து விபத்து- 5 பேர் காயம்

கலிபோர்னியாவில் போர் விமானம் கட்டிடத்துக்குள் பாய்ந்து விபத்து- 5 பேர் காயம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மார்ச் ஏர் ரிசர்வ் பேஸ் விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான எப்-16 ரக போர் விமானம் நேற்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.

பிற்பகல் 3.45 மணியளவில் வேன் புரேன் பவுலேவார்ட் நகரத்தின்மீது பறந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் மீது மோதி ஒரு பண்டகச்சாலைக்குள் (கிடங்கு) பாய்ந்தது. இந்த விபத்தில் கிடங்கின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது.

சமயோசிதமாக பாரசூட் மூலம் கீழே குதித்த விமானி மற்றும் இவ்விபத்தில் காயமடைந்த மேலும் 5 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.