பிளேபாய்’ இதழ் நிறுவனர் ஹூக் ஹெப்னர் காலமானார்

பிளேபாய்’ இதழ் நிறுவனர் ஹூக் ஹெப்னர் காலமானார்

நியூயார்க்: ‛பிளேபாய்' இதழ் நிறுவனர் ஹூக் ஹெப்னர் காலமானார். அவருக்கு வயது 91. அவரது வீட்டில் அவர் காலமானதாக பிளேபாய் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. சிகாகோ நகரில் பிறந்த அவர் கடந்த 1953ம் ஆண்டில் பிளேபாய் இதழை துவங்கினார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள அவர், தனது 86 வயதில் 3வது திருமணம் செய்தார். பல்வேறு பெண்களுடனும் காதல் கொண்டிருந்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக இறந்தார்.