இந்தி அபுதாபியின் மூன்றாவது  நீதிமன்ற அலுவல் மொழியானது

இந்தி அபுதாபியின் மூன்றாவது  நீதிமன்ற அலுவல் மொழியானது

ஐக்கிய அரபு அமீரகங்களின் (யு.ஏ.இ.) தலைநகரமான அபுதாபியில் மூன்றாவது நீதிமன்ற அலுவல் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை அங்கு அரபிக்கும், ஆங்கிலமும் மட்டுமே நீதிமன்ற அலுவல் மொழிகளாக இருந்து வந்தன.

ஐக்கிய அரபு அமீரகங்களில் சுமார் 50 லட்சம் பேர் வசித்துவருகின்றனர். அவர்களில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். எனவே, இங்குள்ள நீதிமன்றங்களில் இந்தியையும் அலுவல் மொழியாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வந்தது.இந்நிலையில், இந்தக் கோரிக்கையை ஏற்று, இந்தியை மூன்றாவது நீதிமன்ற அலுவல் மொழியாக அபுதாபி அரசு நேற்று அறிவித்துள்ளது.