தவறுதலாக சீன எல்லைக்குள் சென்ற ட்ரோன்: இந்தியா விளக்கம்

தவறுதலாக சீன எல்லைக்குள் சென்ற ட்ரோன்: இந்தியா விளக்கம்

பீஜிங்:சீனாவின் வான் எல்லைக்குள் இந்தியாவின் ‘ட்ரோன்’ (ஆளில்லாத சிறிய ரக விமானம்) நுழைந்து விபத்துக்குள்ளானதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியிருக்கிறது.

இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ள அந்நாட்டு அரசு ஊடகம், “சீன வான் எல்லைக்குள் இந்திய ட்ரோன் நுழைந்து சீனாவின் இறையான்மையை மீறுகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளது. 
இந்நிலையில், சீனாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம், “இரு நாட்டு எல்லைப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பயிற்சி ட்ரோன் விமானமானது கட்டுப்பாட்டை இழந்து மாயமானது. சீனாவின் எல்லைக்கு அது சென்று இருக்க கூடும் என்ற அடிப்படையில் சீன ரானுவத்திற்கு இது குறித்தான தகவல் அளிக்கப்பட்டது” என்று விளக்கமளித்துள்ளது.