சீனாவின் மனித உரிமைப் போராளி புற்றுநோயால் மரணம்

சீனாவின் மனித உரிமைப் போராளி புற்றுநோயால் மரணம்

நோபல் பரிசு பெற்ற சீன நாட்டு இலக்கியவாதி லூ ஜியாபோ இன்று காலமானார்.அவருக்கு வயது 61. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.2010 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற அரசியல் ஆர்வலரான லியு ஷியாவ்போ, சீனாவில் மனித போராட்டங்களுக்காக பலமுறை லியு மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான 61 வயதான லியு ஷியாவ்போ, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ பரோலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான கடுமையான அரசியல் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களுக்காக பரவலாக அறியப்பட்ட லியு, சீனா, ஜனநாயகமாகவும், சுதந்திரமாகவும் இருக்கவேண்டும் என்று தொடர்ந்து பிரசாரம் செய்துவந்தார்.  1989 இல் தியனன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற ஜனநாயகத்திற்கு ஆதரவான சார்பு போராட்டத்தில் அவர் முக்கிய பங்கேற்பாளர்களில் ஒருவராக இருந்தார்.