குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்பு

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்பு

தென்கொரியா வடகொரியா இடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழலில்  தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க வடகொரியா விருப்பம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சியோலில் தென் கொரியா - வடகொரியா பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற்றது.

இதில் தென்கொரிய அமைச்சர் சோ மியோங்-கியோன், வடகொரியாவின் பிரதிநிதிகள் குழு தரப்பில் ரி சன் க்வான் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்தப் பேச்சுவார்த்தையில் குளிர்கால ஒலிம்பிக், இரு நாடுகளுக்கு இடையே நிலவும் இதர பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தங்களது நாட்டு வீரர்களை தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் எங்கள் நாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள். அவர்களுடன் எங்களது ஆதரவாளர்கள், பிரதிநிதிகள் உடன் செல்வார்கள் என்று  வடகொரியா கூறியுள்ளது.