ரஷ்யா அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்:  புதின்

ரஷ்யா அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்:  புதின்

65 வயதாகியுள்ள விளாடிமிர் புதின் 2000- ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் அதிபராக இருந்து வருகிறார்.ரஷ்ய அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் ஏற்கெனவே 3 முறை அதிபராக பதவி வகித்துள்ளார்.

அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து பரிசீலனை செய்வேன் என்று புதின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் அடுத்த வருடம் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக புதின் அறிவித்திருக்கிறார்.

அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 80 சதவீத மக்கள் புதினுக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.