சிம்லா சாலைகளில் குவிந்த உறை பனிக்கட்டிகள்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சிம்லா சாலைகளில் குவிந்த உறை பனிக்கட்டிகள்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சிம்லா: இமாச்சலப் பிரதேசம் சிம்லா நகரில் சாலைகளில் பனிக்கட்டிகள் கொட்டிக் கிடப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் முக்கியச் சுற்றுலாத்தலமான சிம்லாவில் இந்த சீசனில் மிகவும் கடுமையாக பனிப் பொழிவு நிலவி வருகிறது. வீடுகள், கடைகள், வீதிகள் என எங்கும் வெள்ளைப்போர்வை போர்த்தியதுபோல் குவிந்த உறை பனிக் குவியலால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

எனினும் சாலைகளில் குவிந்து கிடந்த பனிப்பொழிவால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுப் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அவதியுற்றனர். மேலும் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக நகரின் முக்கியமான சில பகுதிகளில் மின்சேவையும் தடைபட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன், ருத்ரபிரயாக், கேதார்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி ஆகிய இடங்களிலும் கடுமையாகப் பனி பொழிவு நிலவி வருகிறது.


Loading...