ஈராக் உணவு விடுதியில் தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதல்...11 பேர் பரிதாப பலி

ஈராக் உணவு விடுதியில் தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதல்...11 பேர் பரிதாப பலி

பாக்தாத்: மேற்கு ஈராக் பகுதியின் ஹிட் நகரில் உள்ள ஒரு உணவு விடுதியில் ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.

ஈராக் நாட்டின் மேற்கு பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும், ஈராக் ராணுவத்தினருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்டை நடைபெற்று வரும் இடத்தில் இருந்து சுமார் 160 கிலோமிட்டர் தொலைவில் ஹிட் என்ற நகரம் அமைந்துள்ளது.

இந்நிலையில், ஹிட் நகரில் உள்ள ஒரு உணவு விடுதியில் நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாதி தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இந்த தாக்குதலில் 11 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் சுமார் 15 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் பொதுமக்கள் என ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.