நைஜீரியாவில் தற்கொலைப் படையினர் தாக்குதல்- படைவீரர்கள் உள்பட 15 பேர் பலி

நைஜீரியாவில் தற்கொலைப் படையினர் தாக்குதல்- படைவீரர்கள் உள்பட 15 பேர் பலி

நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தொடர்ச்சியாக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமானோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.இந்நிலையில், நைஜீரியா நாட்டின் மாய்துகுரி நகரில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் சிலர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.

இந்த கொடூர தாக்குதலில் படைவீரர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை ஊழியர்கள் உள்பட 15 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு நைஜீரியாவின் மாய்துகுரி நகரில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.