துருக்கி படகு விபத்த்தில் 4 பேர் பலி

துருக்கி படகு விபத்த்தில் 4 பேர் பலி

துருக்கியில் இடம்பெயர  வந்தவர்களின் படகு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். 30 பேர் மாயமானதாக அந்நாடு தெரிவித்துள்ளது.இதுகுறித்து துருக்கி உள்துறை அமைச்சகம் தரப்பில், 'துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தின் மேற்கு கடற்கரைப் பகுதியில் துருக்கிக்கு இடம்பெயர வந்தவர்களின் படகு அலைச் சீற்றத்தால் விபத்துக்குள்ளானது. அதில் 4 பேர் பலியாகினர்.

30 பேர் மாயமாகினர். படகில் எத்தனை பேர் வந்தார்கள் என்ற உறுதியான தகவல் தெரியவில்லை. காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரவமாக நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.