வாஜ்பாய் 93-வது பிறந்தநாள்: உ.பி. சிறைகளில் இருந்து 93 கைதிகள் விடுதலை

வாஜ்பாய் 93-வது பிறந்தநாள்: உ.பி. சிறைகளில் இருந்து 93 கைதிகள் விடுதலை

லக்னோ:மத்தியில் காங்கிரஸ் அல்லாத கட்சியின் ஆட்சியின் பிரதமராக ஐந்தாண்டுகள் நீடித்த முதல் தலைவர் என்ற பெருமைக்குரியவர் அடல் பிஹாரி வாஜ்பாய்.அடல் பிஹாரி வாஜ்பாயின் 93-வது பிறந்தநாளையொட்டி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சிறை கைதிகளின் தண்டனையை குறைத்து 93 பேரை விடுதலை செய்ய அரசு தீர்மானித்தது.

வழக்குகளில் சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அபராத தொகையை செலுத்த முடியாததால் கூடுதலாக சிறை தண்டனை அனுபவித்துவரும் கைதிகள் பட்டியலில் இருந்து இந்த 93 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேசம் மாநில உள்துறை அமைச்சகத்தின் முதன்மை செயலாளர் அரவிந்த் குமார் இதுதொடர்பாக பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 93-வது பிறந்தநாளையொட்டி உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் இருந்து 93 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.