சிட்னியில் பயங்கர காட்டுத் தீ...2,500 ஏக்கர் நிலப்பரப்பு நாசம்

  சிட்னியில் பயங்கர காட்டுத் தீ...2,500 ஏக்கர் நிலப்பரப்பு நாசம்

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ விபத்தால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப் பட்டுள்ளனர்.
சிட்னியில் கடந்த சனிக்கிழமை புற்கள் அதிகம் இருக்கும் காட்டு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று அதிகம் விசும் பகுதி என்பதால் தீ வேகமாக பரவியது.

இந்த தீ விபத்தால் சுமார் 2,500 ஏக்கர் நிலப்பரப்பு நாசம் அடைந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் 500-க்கும் மேற்பட்டோர் தீயை கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக போராடி வருகின்றனர்.மேலும், தீ மக்கள் வசிக்கும் இடத்துக்கு பரவ வாய்ப்புள்ளதால், அங்குள்ள மக்களை பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறும்படி ஆஸ்திரேலியா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்தால் காயமோ, உயிரிழப்போ ஏதும் இல்லையென கூறப்பட்டுள்ளது.