வறட்சியை தேசிய பேரிடராக அறிவித்தது தென் ஆப்பிரிக்கா

வறட்சியை தேசிய பேரிடராக அறிவித்தது தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்க நகர் கேப்டவுனில் மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவியது. இதனைத் தொடர்ந்து ஏப்.16-ல் அந்நகரத்தில் குடிநீர் முழுமையும் தீர்ந்துபோய் ‘டே ஜீரோ’ எனப்படும் பூஜ்ஜிய நாளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.பின்னர் கேப் டவுன் அருகிலுள்ள கிரபவ் நகர விவசாயிகள் அமைப்பு உதவியதால் கேப்டவுனின் டே ஜீரோ நாள்  ஜுன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் தெனாப்பிரிக்காவின் மேற்கு, தென் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனையடுத்து வறட்சியை தேசிய பேரிடராக தென்ஆப்பிரிக்க அரசு அறிவித்துள்ளது.