உலகின் அதிவேக பீரங்கியை தயாரிக்கும் சீனா

உலகின் அதிவேக பீரங்கியை தயாரிக்கும் சீனா

ராணுவத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களை புகுத்துவதில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, நீரிலும், நிலத்திலும் செல்லும் உலகின் அதிவேக பீரங்கியை உருவாக்கும் பணியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறித்து பாப்புலர் சயின்ஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.பொதுவாக நீரிலும், நிலத்திலும் செல்லும் வாகனங்கள் தண்ணீரில் பயணிக்கும்போது வேகம் குறைவாக செல்லும். இந்த குறையை களையும் விதத்தில், புதிய பீரங்கியை சீனா உருவாக்கி வருகிறது.
பொதுவாக நீரிலும், நிலத்திலும் செல்லும் வாகனங்கள் தண்ணீரில் பயணிக்கும்போது வேகம் குறைவாக செல்லும். இந்த குறையை களையும் விதத்தில், புதிய பீரங்கியை சீனா உருவாக்கி வருகிறது.
 இந்த புதிய வாகனம் 4 வீல் டிரைவ் சிஸ்டம் முறையில் இயங்கும். எனவே, நிலத்தில் பயணிக்கும்போது, கடுமையான நிலப்பரப்புகளையும் கூட எளிதாக கடக்கும்.இந்த வாகனத்தில் இருக்கும் V வடிவிலான ஹல் அமைப்பு, உராய்வு மற்றும் இழுவிசையை வெகுவாக குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, இந்த வாகனம் மிக வேகமாக செல்லும் திறனை பெற்றிருக்கிறது. இந்த பீரங்கி தற்போது சோதனை செய்து பார்க்கும் விதத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.


Loading...