பணமதிப்பு நீக்கத்தால் பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கி முன்னேறுகிறது : மோடி

பணமதிப்பு நீக்கத்தால் பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கி முன்னேறுகிறது : மோடி

மணிலா:பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் ஆசியன் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

இந்நிலையில், ஆசியன் வர்த்தக மன்றத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உயர் மதிப்பு கொண்ட கரன்சி நோட்டுகளின் பணமதிப்பிழப்பு மற்றும் தொடர்ச்சியான பிற சீர்திருத்த நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தினை பெரிய அளவில் முறைப்படுத்துவதற்கு உதவின என கூறியுள்ளார்.இந்த நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தினை கடுமையாக பாதிப்படைய செய்தது என அனைத்து பெரிய எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வரும் நிலையில் பிரதமர் மோடியின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.