ஹாங்காங்கில் பேருந்து விபத்தில் 19 பேர் பலி

ஹாங்காங்கில் பேருந்து விபத்தில் 19 பேர் பலி

தை போ: ஹாங்காங் நாட்டின் தை போ நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியது.  இதில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 19 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.  அவர்களில் 17 பேர் ஆண்கள்.  2 பேர் பெண்கள்.  50 பேர் காயமடைந்து உள்ளனர்.

அவர்களில் 37 பேர் நகரில் உள்ள 12 மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  19 பேர் தீவிர நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அந்நாட்டு நேரப்படி இரவு 7.45 மணியளவில் 2 பேர் பேருந்துக்கு அடியில் சிக்கி கொண்டுள்ளனர் என போலீசார் கூறியுள்ளனர்.