மோசுல்  நகருக்குள் நுழைந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன்  ஈராக் படைகள் உக்கிரமான சண்டை

மோசுல்  நகருக்குள் நுழைந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன்  ஈராக் படைகள் உக்கிரமான சண்டை

ஈராக்:மோசுல்  நகருக்குள் ஈராக் படைகள் நுழைந்தன. இதையடுத்து ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் உக்கிரமான சண்டையில் அவை ஈடுபட்டுள்ளன.ஐ.எஸ். பயங்கரவாதிகள் பின்னடைவு.

கடந்த மாத மத்தியில் தொடங்கப்ப‌ட்ட மோசுல் மீட்பு நடவடிக்கையில் இது முக்கிய முன்னேற்றமாகும். குக்ஜாலி தொழிற்பேட்டைப் பகுதிக்குள் நுழைந்த படையினர் அரசு தொலைக்காட்சி நிலையத்தை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர்.

இதனிடையே அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தும் பொருட்டு அவர்களை துப்பாக்கி முனையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நகரின் மத்தியப் பகுதிக்கு அழைத்துச் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஐ.எஸ் பயங்கரவாதிகள் அனைவரும் ஈராக் ராணுவத்தினரிடம் சரணடைய வேண்டும் அல்லது அவர்கள் அழித்தொழிக்கப்படுவார்‌கள் என ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.