“இஸ்ரேல் விவகாரம்” அமெரிக்காவின் அறிவிப்பு புதிய மோதலை உருவாக்கும்: இராக் எச்சரிக்கை

“இஸ்ரேல் விவகாரம்” அமெரிக்காவின் அறிவிப்பு புதிய மோதலை உருவாக்கும்: இராக் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் புதன்கிழமை உரையாற்றும்போது இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மேலும் தற்போது டெல் அவிவ் நகரத்திலுள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்றும், இந்த முடிவால்  இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே அமெரிக்கா மேற்கொண்டு வரும் அமைதி முயற்சிகள் தள்ளிப் போகாது என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அறிவித்துள்ளது புதிய மோதலை ஏற்படுத்தும் என்று  இராக் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் ட்ரம்பின் இந்த முடிவுக்கு அரபு நாடுகள் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.