காபுல்: தற்கொலைப்படை தாக்குதல் பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு

காபுல்: தற்கொலைப்படை தாக்குதல் பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு

காபுல்: கடந்த 1-4-2018 அன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆப்கானிஸ்தான் தலைமை தேர்தல் கமிஷனர் குலா ஜான் அப்துல் பாடி சயத், அக்டோபர் 20-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து, புதிய வாக்களர் சேர்க்கை மற்றும் அடையாள அட்டை வழங்கும் பணிகளில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

பல்வேறு இடங்களில் வாக்காளர் பதிவு மையங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், காபுல் நகரின் தாஷ்-இ பார்சி என்ற பகுதியில் செயல்பட்டு வந்த வாக்காளர் பதிவு மையத்தில் இன்று பிற்பகல் நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டி வைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததாகவும், 56 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.