பயங்கரவாத அமைப்புகளுடன் அரசியல் கூட்டணி அமைக்க தயார்: முஷாரப்

பயங்கரவாத அமைப்புகளுடன் அரசியல் கூட்டணி அமைக்க தயார்: முஷாரப்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஆஜ் நியூஸ் சேனலுக்கு அவர் அளித்த நேர்காணலில், தீவிரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தாய்பா, ஜமாத் உத் தவா ஆகியவற்றுடன் அரசியல் கூட்டணி வைத்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக கூறினார்.

இந்த அறிவிப்பினால் சர்வதேச அளவில் ஏற்படப்போகும் விளைவுகள் பற்றி முஷாரப்பிடம் கேட்ட போது, “இது எங்கள் நாடு, எங்கள் நாட்டின் உள் நிலவரம் என்னவென்பது எங்களுக்குத் தெரியும்,

இங்குள்ள மக்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்று எங்களுக்குத் தெரியும்.லஷ்கர், ஜமாத் உத் தவா இரண்டுமே பாகிஸ்தானின் மிக நல்ல அமைப்புகள்.இவர்கள் அல்கய்தாவையோ, தாலிபன்களையோ ஆதரிப்பவர்களல்லர். ஆகவே அவர்களை எதற்கு நாம் ஒதுக்கித் தள்ள வேண்டும்?