நேபாள்:பனிப்புயலில் சிக்கிய மலையேறிகள்: 9 உடல்கள் மீட்பு

நேபாள்:பனிப்புயலில் சிக்கிய மலையேறிகள்: 9 உடல்கள் மீட்பு

நேபாளத்திலுள்ள இமயமலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீசிய கடுமையான பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த ஒன்பது மலையேறிகளின் உடல்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.இமய மலையில் ஏற்பட்ட பனிபுயலில் சிக்கி மலை ஏற்றம் சென்ற 9 பேர் பலியாகிய பரிதாபமான நிகழ்வு நடந்தூள்ளது.


இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், நேபாளத்திலுள்ள இமய மலையில் தென்கொரியாவைச் சேர்ந்த மலை ஏற்ற குழுவும் அவர்களுக்கு வழிகாட்ட நேபாளத்தைச் சேர்ந்த 4 பேரும் சென்றுள்ளனர். இதில் கடந்த சனிக்கிழமை வீசிய பனிபுயலில் இந்தக் குழு சிக்கியது.இதில் 9 பேர் பலியாகியுள்ளனர். இதில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.