பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை

பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை

1990-களில் நவாஸ் ஷெரீப் இரு முறை பிரதமர் பதவி வகித்தபோது, சட்டவிரோத பண பரிமாற்றங்களில் ஈடுபட்டதாகவும், லண்டனில் 4 சொகுசு அடுக்கு மாடி குடியிருப்புகள் வாங்கியதாகவும் பனாமா ஆவண கசிவில் தகவல் வெளியானது. இதையடுத்து, நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கூட்டு விசாரணைக்குழு அமைத்து நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ‘பனாமா’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. நவாஸ் ஷெரீப்பின் பிரதமர் பொறுப்பும் பறிக்கப்பட்டது. இந்த சூழலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.