இங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் நிரவ் மோடி

இங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் நிரவ் மோடி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் தப்பிச் சென்ற வைர வியாபாரி நிரவ் மோடி இங்கிலாந்து நாட்டில் அடைக்கலம் கோரியுள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது  இந்திய அரசு தன்னை அரசியல் காரணங்களுக்காக துன்புறுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி ரூ. 13,578 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அதுபோலவே, மெகுல் சோக்சி மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 5 ஆயிரத்துக்கும் அதிகமான நிரவ் மோடியின் சொத்துக்களை சிபிஐ முடக்கி உள்ளது.