நேபாளம் :நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி வெற்றி

நேபாளம் :நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி வெற்றி

நேபாள பாராளுமன்ற மேல்சபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. 6 மாகாணங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 59 இடங்களில் இடதுசாரிகள் கூட்டணி 39 இடங்களில் வென்றது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கினைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சி 27 இடங்களையும், மாவோயிஸ்ட் சென்டர் கட்சி 12 இடங்களையும் கைப்பற்றின. நேபாள காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், இதர கட்சிகள் நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றன. 

இந்நிலையில், நேபாள கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சி தலைவரான கே.பி. சர்மா ஒலி அந்நாட்டின் பிரதமராக கடந்த மாதம் 15-ம் தேதி நியமிக்கப்பட்டார்.புதிய அரசியலமைப்பு சட்டத்தின்படி, பிரதமராக பதவி ஏற்ற ஆறு மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது.

இதையடுத்து, இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மூன்றில் இரு மடங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரதமர் கே.பி. சர்மா ஒலி வெற்றி பெற்றார். பாராளுமன்ற கீழ்சபையில் அங்கம் வகிக்கும் 275 268 உறுப்பினர்களில் 268 இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றனர். 208 உறுப்பினர்கள் சர்மா ஒலியை ஆதரித்து வாக்களித்தனர்.