இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த பாக் பயங்கரவாதிகள் திட்டம்: அமெரிக்க உளவுத்துறை

இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த பாக் பயங்கரவாதிகள் திட்டம்: அமெரிக்க உளவுத்துறை

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் தொடர்ந்து தாக்குதலை முன்னெடுப்பார்கள் எனவும், இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மேலும்  பதட்டம்  அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அமெரிக்க உளவுத்துறை  தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமிற்குள் புகுந்து ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 6 ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற மறு தினமே அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் டான் கோட்ஸ் வெளியிட்டுள்ள கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.