பாகிஸ்தானில்  நடைபெற இருந்த  சார்க் மாநாடு ஒத்திவைப்பு

பாகிஸ்தானில்  நடைபெற இருந்த  சார்க் மாநாடு ஒத்திவைப்பு


பாகிஸ்தானின்  இஸ்லாமாபாத்தில் அடுத்த மாதம்  நடைபெற இருந்த   சார்க் மாநாடு ஒத்திக்கப்பட்டு உள்ளது.இந்தியா , பூடான் , வங்கதேசம், ஆப்கானிஸ்தான் , இலங்கை ஆகிய நாடுகள் புறக்கணித்ததை அடுத்து முடிவு  செய்யப்பட்டு உள்ளது.சார்க் மாநாடு நடைபெறும் இடம் , தேதி  பின்னர் அறிவிக்கப்படும்  எனத் தகவல்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில்  வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டை புறக்கணிப்பது என்கிற இந்தியாவின் முடிவிற்கும் சார்க் நாடுகளிடையே ஆதரவு அதிகரித்தது. 

இலங்கை, பூடான் உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானில் மாநாட்டை நடத்த எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் இஸ்லமாபாத்தில் நடைபெறவிருந்த சார்க் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மாநாடு நடைபெறும் இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சார்க் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் நேபாளம் அறிவித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. 

சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது என்று கருதப்படுகிறது.