பாக் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது ஷூ வீச்சு

பாக் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது ஷூ வீச்சு

இஸ்லாமாபாத்: பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு பதவியை இழந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தற்போது விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஆளும் முஸ்லிம் லீக் கட்சித்தலைவராக உள்ள நவாஸ் ஷெரீப், லாகூர் நகரின் காரி ஷாகு பகுதியில் உள்ள ஜாமியா நெமியா மதராசாவில் இன்று நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.

உரையாற்ற எழுந்து மைக்கில் பேச முற்பட்ட போது, திடீரென அவர் மீது ஷூ வீசப்பட்டது. மைக்குகள் வைக்கப்பட்டிருந்த மேஜை மீது விழுந்த ஷூ, நவாஸ் ஷெரீப்பின் காதை தாக்கியது. இதனால், அதிர்ச்சியடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.