சிரியா தாக்குதல் - ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது

சிரியா தாக்குதல் - ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட கொடிய ரசாயன ஆயுதங்களை சிரியா அரசு பயன்படுத்தி அப்பாவி மக்களை கொன்றது தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது.

சர்வதேச ரசாயன ஆயுத தடுப்பு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சிரியாவின் டவுமா நகருக்கு நேரில் சென்று இவ்விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்னும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷியா முன்வைத்தது.
இதற்கிடையே, சிரியாவின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமானப்படைகள் இன்று காலை அடுத்தடுத்து ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தின. 

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுமாறு ரஷியா கேட்டுக் கொண்டது. இதையடுத்து, (இந்திய நேரப்படி) இன்றிரவு 8.30 மணியளவில் அவசரமாக கூடுகிறது.