தென்கொரியா: மருத்துவமனை தீ விபத்த்தில் 41 பேர் உடல் கருகி பலி

தென்கொரியா: மருத்துவமனை தீ விபத்த்தில் 41 பேர் உடல் கருகி பலி

தென் கொரியா நாட்டில் மிரியாங் எனும் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 41 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். இதனை அந்நாட்டு ஊடகமான யோன்ஹாப் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த ஊடகம் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகளில் அடர்ந்த புகையால் சூழப்பட்ட மருத்துவமனையின் மேலே ஹெலிகாப்டர் வட்டமடிப்பது பதிவாகியுள்ளது. மருத்துவமனையை சுற்றிலும் பல தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதும் பதிவாகியுள்ளது..இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். பலர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.