அமெரிக்கவின் 45 வது அதிபராகிறார் டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்கவின் 45 வது அதிபராகிறார் டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க :அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இன்று காலை முதல் வாக்குள் முன்னனி நிலவரம் வெளியாகி வந்தது. ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்த ஹிலரி, அதன் பின்பு பின்னடைவை சந்தித்தார். மொத்தம் உள்ள 538 வாக்குகளில். வெற்றி பெறுவதற்கு 270 வாக்குகள் வேண்டும் என்கிற நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளரான ட்ரம்ப் 276 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரிக்கு 218 வாக்குகள் கிடைத்துள்ளது. இதன் மூலம் ட்ரம்ப் அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்வாகியுள்ளார்.

முக்கிய மாகாணங்களான புளோரிடா, ஓஹியோ, வடக்கு கரோலினா என 20க்கும் அதிகமான மாகாணங்களை ட்ரம்ப் கைப்பற்றியுள்ளார். ஹிலரி கிளிண்டன் கலிபோர்னியா, விர்ஜினியா உள்ளிட்ட 15க்கும் அதிகமான மாகாணங்களை வசப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் , ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.