இனியும் அணு ஆயுத சோதனை நடத்துவோம்: வடகொரியா மீண்டும் அதிரடி

இனியும் அணு ஆயுத சோதனை நடத்துவோம்: வடகொரியா மீண்டும் அதிரடி

சியோல்: அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளின் மிரட்டலை பொருட்படுத்தாது அடுத்தடுத்துசோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது.  உலக நாடுகளின் கடும் எதிர்ப்பு ஐநா பொருளாதார தடை, அமெரிக்காவின் மிரட்டல் ஆகியற்றையெல்லாம் பொருட்படுத்தாது வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், வடகொரியாவை பணியவைக்கும் ஒருநடவடிக்கையாக ஐநா, வடகொரியாவுக்கு எதிரான தடைகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக வடகொரியாவின் ஆடை ஏற்றுமதி உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்துள்ளது. அமெரிக்கா கொண்டு இந்த தீர்மானம் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் ஆதரவுடன் ஒருமனதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறியது. இந்நிலையில், ஐ.நா.வின் தடைகளுக்கு பதிலளித்துள்ள வடகொரிய தூதர் ஹான் டே சாங்,  வடகொரியா தேர்ந்தேடுக்கும் பாதை சரியானது என்பதை காட்டுகிறது.  வடகொரியா தனது இறையாண்மையை பாதுகாக்க தனது பாதுகாப்பு முயற்சிகளை இரட்டிப்பாக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.