பெண்களும் மதுபானம் வாங்கலாம்: சமத்துவத்தினை மீண்டும் நிலை நிறுத்திய இலங்கை

பெண்களும் மதுபானம் வாங்கலாம்: சமத்துவத்தினை மீண்டும் நிலை நிறுத்திய இலங்கை

கொழும்பு:இலங்கையில் பெண்கள் மதுபானம் வாங்குவதற்கும் மற்றும் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு விலக்கியது.இந்த நிலையில் இலங்கை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் ஆண் மற்றும் பெண் சமத்துவத்தினை மீண்டும் நிலை நிறுத்தவும் மற்றும் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் வகையிலும் பெண்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தடையை நீக்குவது என அரசு முடிவு செய்தது.  இதனை தொடர்ந்து மந்திரி மங்கள சமரவீரா இதற்கான கையெழுத்தினை இட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.